அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உத்தரகண்டில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்: பிரதமர் மோடி

​உத்தரகண்டில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 1:17 pm

DIN


உத்தரகண்டில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்டின் சாமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே ரிஷி கங்கா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பனிப் பாறை உடைந்து விழுந்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 150 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது உத்தரகண்ட் நிலவரம் பற்றி அவர் கூறியது:

"இன்று கங்கை நதியின் ஒருபுறத்திலிருந்து நான் பேசும்போது, உத்தரகண்டில் அதன் தொடக்கத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களுடைய மனதைரியத்துக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். அந்த மாநில முதல்வருடன் பேசினேன். அங்குள்ளவர்களிடம் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கிறேன். போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.