அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

 மோடி இந்திய நிலப்பரப்பை சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்: ராகுல்

இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்,

News image
மோடி இந்திய நிலப்பரப்பை சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்: ராகுல்
Updated On :12 பிப்ரவரி 2021, 5:22 am

ANI


புது தில்லி: இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கிழக்கு லடாக் தொடர்பான நிலைப்பாடு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மாநிலங்களைவில் நேற்று ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், நமது படைகள் ஃபிங்கர் 3 பகுதிக்குச் செல்ல விருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஃபிங்கர் 4 நிலப்பரப்பும் நமது எல்லைக்குட்பட்டதே. அங்குதான் நமது படைகள் முகாமிடுவது வழக்கம். ஆனால், ஏன் நமது நிலப்பரப்பை பிரதமர் நரேந்திர மோடி சீனத்துக்கு விட்டுக் கொடுத்தார்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நமது ராணுவப் படைகள் மிகக் கடுமையாகப் போராடி கைலாஷ் பகுதியைக் கைப்பற்றியது, ஆனால், ஏன் தற்போது அங்கிருந்து நமது படைகளை பின்வாங்கச் சொல்ல வேண்டும்? இதற்கு பதிலாக இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன? தேப்சங் சமவெளிப் பகுதிதான் மிக முக்கியப் பகுதியாகும், ஆனால் அங்கு படைகளைக் குவித்திருக்கும் சீன ராணுவம் ஏன் அங்கிருந்து பின்வாங்கவில்லை? அவர்கள் ஏன் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை? இதன் மூலம் இந்திய நிலப்பரப்பை பிரதமர் மோடி சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது தெரிகிறது என்று ராகுல் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.