ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதிக்கு ரயில் மூலம் ஒரு நாள் சுற்றுலா: ஐஆர்சிடிசி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. 

News image
திருப்பதிக்கு ரயில் மூ ஒரு நாள் சுற்றுலா: ஐஆர்சிடிசி தொடக்கம்
Updated On :12 பிப்ரவரி 2021, 7:29 am

DIN

சென்னை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏற்கனவே ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திர சுற்றுலாத் துறைகள் சாலை மார்கமாக ஒரு நாள் சுற்றலாத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.

தற்போது முதல் முறையாக டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் ரயில் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்லும் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், அங்கிருந்து ரயில் மூலம் திருப்பதி ரயில் நிலையத்துக்கு காலை 8 மணிக்கு பக்தர்கள் தங்களது சொந்த செலவில் வந்துவிட வேண்டும். அங்கிருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவில் ரயில் மூலம் ஊர் திரும்பும் வகையில் ஒரு நாள் திருப்பதி சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி கொண்டு வந்துள்ளது.

ரயிலுக்கு முன்பதிவு செய்யும் போதும், டிவைன் பாலாஜி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் போதும் ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் ஆண்கள், வேட்டி, சட்டை, குர்தா, பைஜாமா போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணியலாம். டிசர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அனுமதிக்கப்படாது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தங்கும் வசதி கிடையாது. அசல் அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.