நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை (பிப்.15) நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நாளை நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இனியும் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே ஜனவரி 1-ம் தேதி முதல் வாகனங்களில் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதில் அவ்வப்போது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்குக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, ‘ஃபாஸ்டேக்’ வில்லை வாயிலாகக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும்.
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இணையவழியிலும் வங்கிகள் வாயிலாகவும் ‘ஃபாஸ்டேக்’ வில்லையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய விருதுகள் பெற்ற அமரன் படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

தேசிய விருது பெறும் ஜிவி பிரகாஷ்! தொடர்ந்து 2-வது முறை!

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை

வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



