/

விவசாயிகள் மறியல்: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜியாபாத் ரயில் நிலையத்தில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

News image
விவசாயிகள் மறியல்: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 7:33 pm

DIN

தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜியாபாத் ரயில் நிலையத்தில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் இன்று (பிப்.18) பிற்பகல் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு காவல்துறையை குவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வியாழக்கிழமை (பிப்.18) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு கடந்த வாரம் அறிவித்தது.

அதன்படி இன்று பிற்பகல் அமைதியான முறையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள ரயில் நிலையங்களில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான ரயில் நிலையங்களில் கூடுதலாக 20 ஆயிரம் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.