கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாட்டில் புதிதாக 13,742 பேருக்கு கரோனா 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,742 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,10,30,176 ஆக உயர்ந்துள்ளது.

News image
நாட்டில் புதிதாக 13,742 பேருக்கு கரோனா 
Updated On :24 பிப்ரவரி 2021, 4:58 am

ANI

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,742 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,10,30,176 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 13,742 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,10,30,176-ஆக அதிகரித்தது. 

அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 104 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,567-ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,07,26,702 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,46,907 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.