தில்லி போராட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 40 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
சனிக்கிழமை இரவு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தும் தில்லி எல்லைப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று 7 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் விவசாயிகளின் இறப்பும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும் தற்போது வரை போராட்டத்தில் கலந்துகொண்ட 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் உயிரிழப்புக்கு பதில் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

