எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசு மருத்துவமனைகளில் 'அக்கா உணவகம்': பிகார் அரசு திட்டம்

பிகாரில் தற்போது ஏழு மாவட்ட மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயங்கி வரும் அக்கா உணவகம் வெற்றிபெற்றதை அடுத்து, மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் அரசு உணவகங்களையும் அவர்களிடமே ஒப்படைக்க நிதி

News image
அரசு மருத்துவமனைகளில் 'அக்கா உணவகம்': பிகார் அரசு திட்டம்
Updated On :4 ஜனவரி 2021, 9:59 am

DIN


பிகாரில் தற்போது ஏழு மாவட்ட மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயங்கி வரும் அக்கா உணவகம் வெற்றிபெற்றதை அடுத்து, மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் அரசு உணவகங்களையும் அவர்களிடமே ஒப்படைக்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது என்பதை செயல்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக வைஷாலி மாவட்ட மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அக்கா உணவகம் (தீதீ கி ரசோய்) ஏற்படுத்தப்பட்டது. இது பிறகு கயா, பூர்ணியா உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த 2020 நவம்பர் மாதம் அக்கா உணவகம் தரப்பில் ஆர்பிஐயுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தினமும் 50 ஆர்பிஐ ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் பிகார் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர், தற்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இயங்கும் உணவகங்களை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள் அனைவரும் இந்த உணவகத்தின் ஊழியர்கள் அல்ல. அவர்கள் அந்த அமைப்பின் கூட்டாளிகளாக செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு மாத ஊதியத்தோடு, ஆண்டு இறுதியில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்டப் பங்கும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று பாலமுருகன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.