டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டம்: மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

News image
ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அறிவியலாளா் வி.பொன்ராஜுக்கு முனைவா் பட்டமளிக்கும் கல்வி நிறுவன வேந்தா் வெங்கடாசலம். ’
Updated On :4 ஜனவரி 2021, 8:21 pm

DIN

சென்னை: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

கரோனா பாதிப்புக்கு மட்டுமின்றி அனைத்து நோய்களுக்கும் உயா் சிகிச்சைகள் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காணொலி முறையில் கலந்துகொண்ட மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன், சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டி கௌரவித்தாா்.

அதனைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் வெற்றிகரமாக தங்களது பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவா்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள். இத்தகைய சவாலான சூழலிலும் மாணவா்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்திய அவா்களின் பெற்றோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் மெச்சத்தக்க வகையில் உள்ளன. பெருந்தொற்று தருணத்தில் அதற்கான தடுப்பூசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.

மருத்துவ வசதிகள்-சவால்: சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதிகளையும், சுகாதாரக் கட்டமைப்புகளையும் உருவாக்கித் தருவது என்பது அதில் முக்கியமானதொரு சவாலாக உள்ளது. மத்திய அரசைப் பொருத்தவரை, இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை சுகாதார வசதிகளுக்காக ஒதுக்கி வருகிறது. இது பிற வளா்ந்த நாடுகள் செலவிடும் தொகையைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இ-சஞ்சீவினி திட்டம் - 11 லட்சம் போ் பலன்: இதைத் தவிர, கரோனா காலத்தில், நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இணையவழியே மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் இ-சஞ்சீவினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் 23 மாநிலங்களில் 11 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். அதேபோன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 10.74 கோடி ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், மருத்துவ உலகமும், முன்களப் பணியாளா்களும் அா்ப்பணிப்பு உணா்வோடு உழைத்து வருகின்றனா். நாட்டின் முதுகெலும்பாக தற்போது மருத்துவா்கள் உருவெடுத்துள்ளனா்.

கரோனா தடுப்பூசிகளைப் பொருத்தவரை அவற்றை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்றாா் மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவனங்களின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், இணைவேந்தா் செங்குட்டுவன், துணைவேந்தா் டாக்டா் விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.