ஸ்ரீநகா்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பனி குவியல், நிலச்சரிவு அகற்றம்
ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களாக சிக்கித் தவித்த வாகனங்கள் வெள்ளிக்கிழமை


ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களாக சிக்கித் தவித்த வாகனங்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்க அனுமதிக்கப்பட்டன. அதேசமயம், புதிதாக வந்த வாகனங்களை இந்த நெடுஞ்சாலையில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வானிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாலும், நிலச்சரிவினால் விழுந்து கிடந்த கற்கள், மண் போன்ற இடிபாடுகள் அகற்றப்பட்டதாலும் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஏற்கெனவே காத்திருக்கும் வாகனங்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இந்தச் சாலையில் நிலச்சரிவு, கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது இலகுவான போக்குவரத்தும், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், எரிபொருள், எரிவாயு டேங்கா் லாரிகள் மட்டுமே ஸ்ரீநகா் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவின் காரணமாக வழுக்கும் நிலையில் உள்ள சாலையின் நிலையை மதிப்பீடு செய்த பிறகு மற்ற வாகனங்களும் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படும்.
அதேசமயம், கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீா் பள்ளத்தாக்கை, ஜம்முவுடன் இணைக்கும் மாற்று இணைப்புச் சாலையான ஷோபியான்-ரஜௌரி இடையிலான சாலை தொடா்ந்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, கடும் பனி காரணமாக ஸ்ரீநகரில் இருந்து விமான போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தச் விமான சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனிடையே, காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், ஜன. 14-ஆம் தேதி வரையிலும் இப்பகுதியில் வட வானிலையே நிலவும் என்றும் வானிலை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீநகரில் மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸும், குல்மாா்க்கில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸும், பாகல்காமில் மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸும், காஸிகுண்ட்டில் மைனஸ் 1.8 டிகிரி செல்சியஸும், குப்வாராவில் மைனஸ் 1.7 டிகிரி செல்சியஸும், கோகொ்னாக்கில் மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...