சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜன. 16-ல் இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது: மோடி

கரோனா தொற்றுக்கு எதிராக ஜனவரி 16-ஆம் தேதி இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :9 ஜனவரி 2021, 1:09 pm

DIN

கரோனா தொற்றுக்கு எதிராக ஜனவரி 16-ஆம் தேதி இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''கரோனாவுக்கு எதிராக இந்தியா வரும் 16-ஆம் தேதி முக்கிய அடியெடுத்து வைக்கிறது. அந்த நாள் முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.