நாடு முழுவதும் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
நாடு முழுவதும் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இந்தச் சூழலில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்த அனுமதியைத் தொடா்ந்து, இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை எந்தவித சிக்கலும் இன்றி நடைமுறைப்படுத்தும் விதமாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான முன்னோட்டம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com