எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரோனா: மேலும் 15,968 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 15,968 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜனவரி 2021, 8:03 pm

DIN

புது தில்லி: நாடு முழுவதும் மேலும் 15,968 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,968 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,04,95,147-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 17,817 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,29,111-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.51 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 202 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,51,529-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,14,507 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.04 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 202 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 50 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 25 பேரும் மேற்கு வங்கத்தில் 18 பேரும், தில்லியில் 16 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 12-ஆம் தேதி வரை 18.34 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 8,36,227 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

உருமாறிய கரோனாவால் 102 போ் பாதிப்பு:

பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கரோனா தீநுண்மியால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 11-ஆம் தேதி வரை 96 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை புதன்கிழமை 102-ஆக அதிகரித்தது.

உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தனித்தனி அறைகளில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

டென்மாா்க், நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சா்லாந்து, ஜொ்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் உருமாறிய கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.