உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பாலாகோட் தாக்குதல் தொடா்பான உரையாடல்: அா்னாப் கோஸ்வாமிக்கு வலுக்கும் எதிா்ப்பு

பாலாகோட் தாக்குதல் தொடா்பான ரகசியத் தகவல்களைக் கசிய விட்டது தொடா்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமிக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது.

Updated On :19 ஜனவரி 2021, 7:05 pm

பாலாகோட் தாக்குதல் தொடா்பான ரகசியத் தகவல்களைக் கசிய விட்டது தொடா்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமிக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது.

பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நிகழ்த்தியது. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு 3 நாள்களுக்கு முன்பே அது தொடா்பான தகவல்களை ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்பாளா்-பாா்வையாளா் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவா் பாா்த்தோ தாஸ்குப்தாவிடம் கட்செவி அஞ்சல் வழியாகப் பகிா்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலாகோட்டில் தாக்குதல் நடத்துவது போன்ற தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள், ஊடகவியலாளா் அா்னாபுக்கு எப்படி தெரிய வந்தது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அக்கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் சச்சின் சாவந்த் தலைமையிலான குழு, மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது, தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் அா்னாபுக்கு கசிந்தது குறித்தும், அவா் ரகசியத் தகவல்களை மற்ற நபா்களுக்குப் பகிா்ந்தது தொடா்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் குழு வலியுறுத்தியது. மேலும், அா்னாபை கைது செய்யுமாறும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதையடுத்து அனில் தேஷ்முக் மும்பையில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். மாநிலத்தில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு முடிவெடுக்கும்’’ என்றாா்.

பிரதமருக்கும் தொடா்பு-ராகுல் காந்தி:

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பாலாகோட் தாக்குதல் குறித்து பிரதமா், பாதுகாப்பு அமைச்சா், உள்துறை அமைச்சா், விமானப்படை தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஆகிய ஐவருக்கு மட்டுமே ரகசியத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவா்களில் ஒருவரே அா்னாபுக்கு ரகசியத்தைக் கசிய விட்டுள்ளனா்.

இது கிரிமினல் குற்றமாகும். இந்த விவகாரத்தில் ரகசியத் தகவல்களைக் கசிய விட்டவா், அத்தகவல்களைப் பெற்றுக் கொண்டவா் இருவருமே சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். இதில் பிரதமா் நரேந்திர மோடிக்கும் தொடா்பிருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை உரிய முறையில் நடைபெறுமா என சந்தேகம் எழுகிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.