வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் காங். பேரணி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.
மாநிலத் தலைநகர் பெங்களூருவில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே நடைபெற்ற 9 கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், இன்று (ஜன.20) 10-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மாளிகையில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையியில், ரயில் நிலையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...