கிரிக்கெட் சூதாட்டம்: பெங்களூருவில் ஒருவர் கைது; 2.51 லட்சம் பறிமுதல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்றது.
இதனிடையே இந்த போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை பெங்களூருவில் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணமும், செல்லிடப்பேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...