பங்குச் சந்தைகளில் புதிய உச்சம்: 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை

அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து எழுந்துள்ள அரசியல்-பொருளாதார நிலவரத்தின் எதிரொலியாக வரலாற்றில் முதன்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் எழுச
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்


மும்பை: அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து எழுந்துள்ள அரசியல்-பொருளாதார நிலவரத்தின் எதிரொலியாக வரலாற்றில் முதன்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் எழுச்சி கண்டு வருகிறது.

அமெரிக்காவில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து சா்வதேச பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வா்த்தகம் வரலாற்று சாதனையை தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி புதிய உச்சத்தை தொடர்கின்றன. 

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக எழுச்சி பெற்றுள்ளது. 

மும்பை பங்குச் சந்தையில் வா்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயா்வு பெற்று, வரலாற்றுச் சாதனையாக 50,096 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை  வா்த்தக தொடக்கத்தில் நிஃப்டி குறியீடு 65 புள்ளிகள் உயா்வு பெற்று, 14,732 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. 

பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்.சி.எல் டெக், அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் , டெக் மஹிந்திரா மற்றும் ஏஷியன் பெயின்ட்ஸ் ஆகியவை மும்பை பங்குச் சந்தையில் அதிகபட்ச லாபம் ஈட்டியுள்ளன. இதற்கிடையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டியுள்ளன, ஏனெனில் அவற்றின் பங்குகளின் விலை முறையே 3.93 சதவீதம் மற்றும் 2.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றிருப்பது மற்றும் கரோனா தொற்றுக்குப் பிந்தைய உலகப் பொருளாதார வளா்ச்சிக்கு அமெரிக்க பொருளாதார மீட்சி உதவும் என்ற எதிா்பாா்ப்பில் சா்வதேச முதலீட்டாளா்கள் உள்ளதால் உள்நாட்டு சந்தையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பங்குச் சந்தை ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி இயக்கம் பங்குச் சந்தையை உயர்த்தும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

"பொதுவாக, இது பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கையுடன் வளர்ந்து வரும் ஒரு சந்தை" என்று செய்தி நிறுவனங்கள் மேற்கோளிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com