செங்கோட்டையில் கொடியேற்றியவரை கைது செய்யாதது ஏன்?: விவசாய சங்கம்
குடியரசு நாளன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் கொடியேற்றியவரை இன்னும் கைதுசெய்யாதது ஏன்?: விவசாய சங்கம்


குடியரசு நாளன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் கொடியேற்றியவரை இன்னும் கைதுசெய்யாதது ஏன் என்று கிஷான் மகாபஞ்சாயத் அமைப்பைச் சேர்ந்த விவசாயி ராம்பால் ஜாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் விவசாயிகள் குவிந்திருந்தபோது செங்கோட்டையில் கொடியேற்றிய நபர் குறித்த தகவல்கள் வெளியான நிலையிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதன் மூலம் டிராக்டர் பேரணியில் அரசு தமக்கு வேண்டிய நபர்கள் மூலம் அரசு செய்த சதிச் செயல் வெளியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து குடியரசு நாளன்று ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பேரணியில், காவலர்களுக்கும் - விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காவலர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். 300 காவலர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 22 விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...