டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நீதியை நிலைநாட்டுவதில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்

நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் தமிழகத்துக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.

News image
நீதியை நிலைநாட்டுவதில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்
Updated On :29 ஜனவரி 2021, 6:13 am

DIN


புது தில்லி: நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் தமிழகத்துக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.

நாட்டில் சட்டம், காவல், நீதித்துறைகளின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட 2020-ஆம் ஆண்டுக்கான இந்திய நீதித்துறை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரமும், இரண்டாமிடத்தில் தமிழகமும் இடம்பிடித்துள்ளன.

சட்டம், நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வெளியிடப்பட்டிருக்கும் இந்திய நீதித்துறை அறிக்கையில், 10 புள்ளிகளுக்கு 5.77 புள்ளிகள் பெற்று மகாராஷ்டிரம் 18 பெரிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 5.73 புள்ளிகள் பெற்றுள்ளது.

அதே பட்டியலில் உத்தரப்பிரதேசம் 3.15 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

சிறைச்சாலை ஊழியர்களின் அளவு, காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை என 53 காரணிகளை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் நீதித்துறைகள் எவ்வாறு செயல்படுகிறது என்று ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வில், நாடு முழுவதும் சிறைச்சாலையில் அதிக நெரிசல் காணப்படுவதாகவும், அதிலிருக்கும் 69 சதவீதம் பேர் விசாரணைக் கைதியாகவே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

டாடா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்தியா நீதி அறிக்கை 2020- என்ற ஆய்வறிக்கையில், பொதுமக்களுக்கு நீதி வழங்குவதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் என்ற அடிப்படையில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என்று இரண்டாகப் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே மகாராஷ்டிரம் இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த அறிக்கையில் தமிழகம் மூன்றாமிடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் பிரிவல் திரிபுரா மற்றும் சிக்கிம் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.