பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஆந்திரம், தெலங்கானாவில் 31 ரயில் நிலையங்கள் தற்காலிக மூடல்

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் தென் மத்திய ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 31 ரயில் நிலையங்களை மூட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2021, 6:57 pm

DIN

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் தென் மத்திய ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 31 ரயில் நிலையங்களை மூட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கரோனா தொற்று காரணமாக சில ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை இல்லாத காரணத்தால் அவற்றை மூட தெற்கு மத்திய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

பிப்.1 முதல் 29ஆம் தேதி வரை ஒரு சில ரயில் நிலையங்களும், ஏப்.1ஆம் தேதி முதல் கூடுதலாக சில ரயில் நிலையங்களையும் மூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

இதில் ஒரு ரயில் நிலையத்தை தவிா்த்து மற்ற அனைத்து ரயில் நிலையங்களும் ஆந்திரம், தெலங்கானாவில் உள்ளன. செகந்திராபாத் பிரிவில் உள்ள 16 ரயில் நிலையங்கள், குண்டக்கல் பிரிவில் 3 ரயில் நிலையங்கள், நாந்தேட் பிரிவில் ஒரு ரயில் நிலையம், குண்டூரை சோ்ந்த 4 ரயில் நிலையங்கள், ஹைதராபாத் பிரிவைச் சோ்ந்த 7 ரயில் நிலையங்கள் என 31 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.