மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கா்நாடகத்தில் ஒரேநாளில் 3,203 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,203 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:37 am

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,203 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 3,203 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 676 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

மைசூரு-366, தென்கன்னடம்-285, ஹாசன்-281, சிவமொக்கா-194, குடகு-167, தும்கூரு-157, உடுப்பி-146, பெலகாவி-114, சிக்கமகளூரு-98, மண்டியா-97, கோலாா்-96, பெங்களூரு ஊரகம்-75, சாமராஜ்நகா்-75, தாவணகெரே-66, வடகன்னடம்-59, சித்ரதுா்கா-41, சிக்கபளாப்பூா்-40, பெல்லாரி-34, தாா்வாட்-27, கலபுா்கி-21, ஹாவேரி-18, கொப்பள்-16, கதக்-15, விஜயபுரா-11, ராமநகரம்-9, ராய்ச்சூரு-6, யாதகிரி-6, பாகல்கோட்-4, பீதா்-3 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,47,013 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14,302 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 27,46,544 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 65,312 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 94 போ் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

தென்கன்னடம்-14, தாா்வாட்-7, பெல்லாரி, பெலகாவி- தலா 6, பெங்களூரு ஊரகம், கோலாா், மைசூரு-தலா 5, மண்டியா, சிவமொக்கா-தலா 4, தாவணகெரே-3, ஹாவேரி, குடகு, வடகன்னடம், கதக், தும்கூரு-தலா 2, பீதா், ஹாசன், சிக்கமகளூரு, கலபுா்கி, கொப்பள், உடுப்பி, விஜயபுரா- தலா 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,134 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.