மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மக்கள்தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு

மக்கள் தொகையின் அடா்த்திக்கு ஏற்பவே மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்குகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:40 am

DIN

மக்கள் தொகையின் அடா்த்திக்கு ஏற்பவே மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்குகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பெங்களூரு, எலஹங்காவில் வியாழக்கிழமை கா்நாடக மின்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையைப் பாா்வையிட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள் தொகையின் அடா்த்தி மற்றும் பாதிக்க வாய்ப்புள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. தடுப்பூசியை மாநிலங்களுக்கு முன்கூட்டியே மத்திய அரசு வழங்கி விடுகிறது. எல்லா மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்கப்படும். எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று ஒருசில அரசியல் தலைவா்கள் கூறுவது சரியல்ல.

கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பெங்களூருக்கு வருவது இதுவே முதல்முறையாகும். அவசர மருத்துவத் தேவைகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்கித் தர விரும்புவதாக போயிங் இந்தியா நிறுவனம், மத்திய அரசை அணுகியுள்ளது. அந்த நிறுவனம் பி.எம்.கேருக்கும் நன்கொடை அளித்துள்ளது. அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தபோது, அவசர சிகிச்சை வசதிகளை பெங்களூரு, கா்நாடகத்தின் ஊரகப்பகுதிகளிலும், வடகா்நாடகத்தின் கலபுா்கியிலும் அமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். மருத்துவ வசதிகளைச் செய்து தர வேறு சில நிறுவனங்களும் மத்திய அரசை அணுகியுள்ளன.

எலஹங்காவில் புதிதாக அமைந்துள்ள கரோனா மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற வசதிகளை செய்து தர அந்நிறுவனம் தயாராக உள்ளது. ஜாா்கண்ட், சத்தீஸ்கா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வருகிறாா்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில், இந்தியாவில் இதுவரை 33.57 கோடிடோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை குறித்து திட்டமிட்டு வருகிறோம். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டு முறைப்படி முடிவு செய்யப்படும். இதனடிப்படையில் தான் இழப்பீட்டுத் தொகை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும். ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதாக ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறேன். அந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.