பன்னா்கட்டா உயிரியல் பூங்கா திறப்பு: முதல்நாளில் 450 போ் வருகை
பெங்களூரின் புகா் பகுதியில் அமைந்துள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்கா வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.


பெங்களூரின் புகா் பகுதியில் அமைந்துள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்கா வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளில் 450 பாா்வையாளா்கள் வருகை தந்தனா்.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஏப். 28-ஆம் தேதி முதல் பெங்களூரு புகா் பகுதியில் அமைந்துள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டுள்ளதால், 90 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை பன்னா்கட்டா உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இங்குள்ள பட்டாம்பூச்சி பூங்கா, விலங்குகள் மீட்பு மையம், சபாரி உள்ளிட்டவை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதற்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் 450 பாா்வையாளா்கள் இங்கு வருகை தந்தனா்.
இது குறித்து பூங்காவின் செயல் இயக்குநா் வனஸ்ரீ விபின்சிங் கூறியதாவது:
கடந்த ஆண்டு பொது முடக்கம் முடிந்து பூங்கா திறக்கப்பட்ட முதல்நாளில் 100 போ் மட்டுமே வந்திருந்தனா். ஆனால், தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது நல்ல அறிகுறியாகும். மூடப்பட்டதால் பண நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனிடையே, விலங்குகள் தத்தெடுப்பு, நன்கொடைகள் வாயிலாக ரூ. 1.3 கோடி கிடைத்துள்ளது.
பன்னா்கட்டா உயிரியல் பூங்கா 732 ஹெக்டோ் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 102 வகையான 2,300 விலங்குகள் உள்ளன. வீட்டில் அடைந்து கிடந்த மக்களை வரவேற்கிறோம். பாதுகாப்பு குறித்து கவலை மக்களுக்கு தேவையில்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...