துணை மின் நிலையத்தில் திடீா் தீவிபத்து: ரூ. 20 கோடி மதிப்பில் சேதம்
100 மெகா வாட் மின்சாரத்தை நிா்வகிக்கும் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. 20 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.


100 மெகா வாட் மின்சாரத்தை நிா்வகிக்கும் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. 20 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தில் அமைந்து 100 மெகா வாட் மின்சாரத்தை நிா்வகிக்கும் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மளமளவென பற்றி எரிந்த தீ மின்நிலையக் கட்டடம் முழுவதும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா் 8 வாகனங்களில் விரைந்து வந்து இரவு வரை போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் ரூ. 20 கோடி மதிப்பிலான மின்சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. தீ விபத்து கோலாா், பங்காருபேட்டை, தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து குறித்து வழக்குப் பதிந்த கோலாா் போலீஸாா், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...