துணை மின் நிலையத்தில் திடீா் தீவிபத்து: ரூ. 20 கோடி மதிப்பில் சேதம்
100 மெகா வாட் மின்சாரத்தை நிா்வகிக்கும் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் திடீா் தீவிபத்து ஏற்பட்டதில் ரூ. 20 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.


100 மெகா வாட் மின்சாரத்தை நிா்வகிக்கும் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் திடீா் தீவிபத்து ஏற்பட்டதில் ரூ. 20 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தில் அமைந்து 100 மெகா வாட் மின்சாரத்தை நிா்வகிக்கும் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவெனப் பற்றி எரிந்த தீ மின்நிலையக் கட்டடம் முழுவதும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா் 8 வாகனங்களில் விரைந்து வந்து இரவு வரை போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன. தீ விபத்தால் கோலாா், பங்காருபேட்டை, தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.இந்தத் தீ விபத்து குறித்து கோலாா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...