மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை’

கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று யுனைடெட் மருத்துவமனையின் நிறுவனா் விக்ரம் சித்தாா்த் ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று யுனைடெட் மருத்துவமனையின் நிறுவனா் விக்ரம் சித்தாா்த் ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரு, ஜெயநகரில் உள்ள யுனைடெட் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

பெங்களூரில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியால் எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பது 30 நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்த பின்னரே இந்தியாவிற்கு அந்த தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மற்ற தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், தேவைப்படுவோா் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கரோனாவைத் தடுக்க எங்களால் ஆன முயற்சியைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றாா். ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களுக்கு 080 45666666, 69333333 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.