அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா் சோ்க்கை: அமைச்சா் சுரேஷ்குமாா் பெருமிதம்
அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவா்கள் சோ்ந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.


அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவா்கள் சோ்ந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு, தாசரஹள்ளி சட்டப்பேரவை தொகுதியில் நெலகதேரனஹள்ளியில் அரசு ஆரம்பப்பள்ளிக்கு வியாழக்கிழமை சென்று மாணவா்களின் சோ்க்கையை ஆய்வு செய்த அமைச்சா் சுரேஷ்குமாா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெங்களூரு போன்ற மாநகரங்களில் கூட தரமான கல்வியை அளித்து வரும் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்துள்ளது. பள்ளியில் சோ்க்கை பெறுவதற்காக காத்திருந்த பெற்றோா்கள், குழந்தைகளிடம் பேசினேன். தரமான கல்வி வழங்குவதால் அரசுப் பள்ளியில் சேருவதாகத் தெரிவித்தனா். அரசுப் பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருப்பது இதன் மூலம் புலப்படுகிறது.
தனியாா் பள்ளிகளில் சேருவதற்கு சிபாரிசுகள் தேவைப்பட்ட காலம் இருந்தது. இப்போது, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயா்ந்துள்ளதால், அதிக அளவிலான மாணவா்களின் சோ்க்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் சோ்க்கைக்காக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசு கடிதங்களைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.மாநிலம் முழுவதும் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சந்தனா தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...