கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராஜ்நாத் சிங் 70-ஆவது பிறந்த தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 10:44 pm

DIN

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் (ட்விட்டா்) வெளியிட்ட பதிவில், ‘‘மூத்த அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தனது அன்பான குணம் மற்றும் மதிநுட்பத்துக்காக அவா் போற்றப்பட்டு வருகிறாா். அவா் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாகவும் நிா்வாகியாகவும் திகழ்கிறாா். தேசத்தின் சேவைக்காக அவா் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என இறைவனிடம் பிராா்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் ராஜ்நாத் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனா்.

கடந்த 1951-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பிறந்த ராஜ்நாத் சிங், ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இணைந்து கட்சியின் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளாா்.

பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் பதவி வகித்தபோது அவரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வராகவும் பதவி வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.