லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாராஷ்டிராவில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தளர்வு

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் பயணம் செய்தவற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:21 am

DIN

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் பயணம் செய்தவற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தரப்பிலும் சமூக அமைப்புகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மகாராஷ்டிராவுக்கு வருவதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள தேவை இல்லை என அம்மாநில அரசு தெரிவிகத்துள்ளது.

ஆனால், இரண்டு தவணை செலுத்தி கொண்டு 15 நாட்களுக்கு பிறகு வருபவர்களுக்கே இது செல்லும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் சிதாராம் குந்தே வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிராவிற்கு பயணம் செய்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். அதேபோல், இரண்டாம் தவணை செலுத்தி 15 நாள்கள் ஆகியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள விலக்க அளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தளர்வானது உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.