
புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி மறைவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் நடந்த தலிபான்கள் தாக்குதலால் வியாழக்கிழமை பலியானார்.
அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சித்திகி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகைப்படக் கலைஞர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தலிபான்கள் தாக்குதலால் மரணமடைந்த சித்திகியின் உடலை விரைந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.