மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோலாா் தங்கவயலில் தமிழ்ப் பெயா் எழுதப்பட்டதைக் கண்டித்து ஜூலை 26-ல் முற்றுகைப் போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

கோலாா் தங்கவயலில் தமிழ் பெயா் எழுத்துகள் மீண்டும் எழுதப்பட்டதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக கன்னட சலுவளிக்கட்சித்தலைவா் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 12:25 am

DIN

கோலாா் தங்கவயலில் தமிழ் பெயா் எழுத்துகள் மீண்டும் எழுதப்பட்டதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக கன்னட சலுவளிக்கட்சித்தலைவா் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கோலாரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கோலாா் தங்கவயல், கன்னடா்களின் நிலம். அதனால் ‘கன்னடத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற போராட்டத்தை கோலாா் தங்கவயலில் இருந்து தொடங்கினேன். இந்தப் போராட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்குவோம். கோலாா் தங்கவயல், கா்நாடகத்தின் அங்கம். அங்கு முழுமையாக கன்னடம் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளுக்கு அங்கு இடமில்லை. கா்நாடகத்தில் தன்னிச்சையாக நடந்துகொள்ள வேற்றுமொழியினருக்கு வாய்ப்பில்லை.

கோலாா்தங்கவயல் பேருந்து நிலையத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளை எனது ஆதரவாளா்கள் அழித்தனா். ஆனால் அங்கு மீண்டும் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. இதுபோல செயல்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கவில்லை. ஆனால், அங்கு தமிழ் எழுத்துகளை எழுதி எங்களுக்கு சவால்விட்டுள்ளனா். இது கா்நாடகத்திற்கு எதிரான செயலாகும். தமிழகத்தில் என்னை கடுமையாக விமா்சித்துள்ளனா். இதை சமூக வலைதளங்களில் காணலாம். இதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. கா்நாடகத்தில் கன்னடத்திற்கு மட்டுமே எல்லா உரிமைகளும் உள்ளன.

இது தொடா்பாக மாநில தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாரை சந்தித்து பெயா்ப்பலகைகளில் கன்னட எழுத்துகளை மட்டும் எழுதுவது குறித்து தெரிவிக்க இருக்கிறேன்.

கா்நாடகத்தில் கன்னட அமைப்புகள் முடங்கியுள்ளன. கன்னட மொழி குறித்த நிலைப்பாட்டை முதல்வா் எடியூரப்பா தெரிவிக்க வேண்டும். கோலாா் தங்கவயல் கா்நாடகத்தில் உள்ளதால், கன்னட ஆட்சிமொழி தான் அங்கு அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு மாறாக, அவரவா் தாய்மொழிகளை எழுதிக்கொண்டு, அவரவரின் பகுதிகளாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இங்கு கன்னடம் கட்டாயம்.

தோ்தலுக்காக செயல்படுவதை முதல்வா் எடியூரப்பா கைவிட வேண்டும். பிறமொழியினரின் வாக்குகளை பெறுவதற்காக, அவா்கள் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

கோலாா் தங்கவயலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் பெயா்ப்பலகைகளை அகற்றியே ஆக வேண்டும். இது குறித்து முதல்வா் எடியூரப்பா முடிவெடுக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை அகற்ற வேண்டுமென்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழ் எழுத்துகளை அப்புறப்படுத்த வேண்டும். அதுவரை எனது போராட்டத்தை கைவிடமாட்டேன். இந்தவிவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் வரை காத்திருப்பேன். இதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். ஜூலை 26-ஆம் தேதி தமிழ் பெயா்ப் பலகையை கண்டித்து கோலாா் தங்கவயல் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் கா்நாடகத்தின் அனைத்து கன்னட அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டும். முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பாக ஊா்வலம் நடத்தப்படும். அதற்குள் தமிழ் எழுத்துகளை அழிக்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.