பாகிஸ்தானில் நான்காவது முறையாக டிக்டாக்கிற்கு தடை

தகாத வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி பாகிஸ்தானில் நான்காவது முறையாக டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக்
டிக்டாக்

தகாத வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறி பாகிஸ்தானில் நான்காவது முறையாக டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, பிராந்திய நீதிமன்றத்தின் உத்தரவின்படி டிக்டாக் செயலி இரண்டு நாட்கள் முடக்கப்பட்டது.

இந்நிலையில், தகாத வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி பாகிஸ்தானில் நான்காவது முறையாக டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "டிக்டாக்கில் தகாத வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வீடியோக்களை டிக்டாக் நீக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த முடிவை சமூக ஆர்வலர்கள் பலர் கண்டித்துள்ளனர். பாகிஸ்தானின் இணையமும் ஊடகமும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் டிக்டாக்கிற்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். டிக்டாக் மூலமாக பலர் பொருள்களை விற்றுவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com