பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெளிநாடுகளில் இருந்து 60.92 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: மத்திய அரசு தகவல்

கரோனா தொற்று காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 60.92 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 12:34 pm

DIN

கரோனா தொற்று காலத்தில் வெளிநாடுகளில் இருந்து கடந்த ஏப்ரல்  30 வரை 60.92 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா பொதுமுடக்க காலத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எனினும் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக அனுமதி பெற்ற விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. 

அதன்படி, கரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு இத்திட்டத்தினை ஏற்பாடு செய்தது. 

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில், 2021, ஏப்ரல் 30 வரை கரோனா தொற்று காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 60.92 லட்சம் (60,92,264) இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

வந்தே பாரத் மிஷனின் கீழ் கரோனா தொற்றுநோய்களின் போது வந்த 60 லட்சம் பேரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 25,44,288 பேர், பிரிட்டனிலிருந்து 1,97,730 பேர், அமெரிக்காவிலிருந்து 3,97,542 இலங்கையிலிருந்து 23,350, தாய்லாந்திலிருந்து 7,603, கத்தார் நாட்டிலிருந்து 3,67,078, சவுதி அரேபியாவிலிருந்து 4,79,103, பாகிஸ்தானிலிருந்து 683, ஓமனில் இருந்து 3,29,139, நேபாளத்திலிருந்து 26,900, மாலத்தீவில் இருந்து 1,22,161, கனடாவிலிருந்து 96,900, மற்றும் வங்கதேசத்தில் இருந்து  62,499 பேர் திரும்பியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.