ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்த விவரங்களை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.
“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது. கடைகள், வணிக செயல்பாடுகள், பொதுப் போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் இயல்பு நிலையில் செயல்பட்டு வருகின்றது.
தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் பயங்கரவாத அமைப்பினரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் செல்லாமல் இருக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


