கொலை செய்யப்பட்டாரா நீதிபதி? சிசிடிவி வெளியாகி பரபரப்பு
ஜார்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதியை வாகனம் ஏற்றி கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஜார்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதியை வாகனம் ஏற்றி கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் நீதிபதி ஒருவர் விபத்தில் சிக்கி பலியானதாக செய்தி வெளியானது. ஆனால், இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சி வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது வாகன ஓட்டி உள்நோக்கத்துடன் இடித்து விபத்துக்குள்ளாக்கினார். பின்னர், சம்பவ இடத்திலிருந்து வாகனம் சென்றுவிட்டது.
பின்னர், ரத்த வெளத்தில் கிடந்த நீதிபதியை சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். அடையாளம் தெரியாமலேயே நீதிபதியின் உடல் மருத்துவமனையில் பல மணி நேரம் கிடந்துள்ளது. நீதிபதியை காணவில்லை என அவரின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க | மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நீதிபதி உயிரிழந்தது தெரியவந்தது. நீதிபதியின் மீது வாகனம் மோதுவது போன்ற சிசிடிவி விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விடியோவை ஆதாரமாக கொண்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை இயக்குநர் அமோல் வினுகாந்த் கூறுகையில், "லகான் குமார் வர்மா, ராகுல் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை செய்ததாக அவர்கள் இருவர் ஒப்புக் கொண்டனர்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...