எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், பெகாஸஸ் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து காலை முதலே அவை ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் 2 மணிவரை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாநிலங்களவையிலும் பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...