புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை காங். எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

News image

சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை காங். எம்.பி.க்கள் கூட்டம்

Updated On :29 ஜூலை 2021, 10:40 am

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தில், தொடர்ந்து 8வது நாளாக பெகாஸஸ் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸின் மக்களவை மற்றும் மாநிலங்களவை  உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.