கொச்சி: கரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 10.88 சதவீதம் சரிவடைந்துள்ளது.
2019 - 2020ஆம் ஆண்டில் நாட்டில் கடல் உணவு ஏற்றுமதி 12,89,651 டன்களாக இருந்த நிலையில், இது 2020-21-ஆம் ஆண்டில் 11,49,341 டன்களாகக் குறைந்துள்ளது. 2019 - 2020ஆம் ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த கடல் உணவின் மதிப்பு ரூ.46,662.85 கோடியாகும்.
இந்தியாவிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் முன்னணி இறக்குமதியாளர்களாக அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளன.
அதே நேரத்தில் உறைந்த இறால் முக்கிய ஏற்றுமதி பொருளாக அதன் நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் உறைந்த மீன் வகை உள்ளது.
இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில், நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி முதல் அரையாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கடைசி காலாண்டில் நிச்சயம் மீளும் என்று கடல் உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக நிர்வாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெய்வேலி: அதிமுக வெற்றி

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

திமுக தோல்வி: கட்சி நிா்வாகி மாரடைப்பால் மரணம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


