தெலங்கானா மாநில தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
தெலங்கானா மாநில தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


தெலங்கானா மாநில தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தெலங்கானா மாநிலம் உருவான தினத்தில் அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனித்துவமான கலாசாரம் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கிய கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம். தெலங்கானா மக்களின் நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து தெலங்கானா தனி மாநிலமாக உருவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...