கேரளத்தில் புதிதாக 16,204 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 16,204 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 16,204 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"மாநிலத்தில் புதிதாக 16,204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,022 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 14.09 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,08,03,168 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நாள்களில் மேலும் 156 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,437 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 154 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 15,048 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 928 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20,237 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,24,248 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,39,064 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...