சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கரோனா தினசரி பாதிப்பு 2வது நாளாக லட்சத்துக்கு கீழ் குறைந்தது

நாடு முழுவதும் கரோனா தினசரி பாதிப்பு இரண்டாவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

News image

கரோனா பரிசோதனை

Updated On :9 ஜூன் 2021, 4:09 am

DIN


நாடு முழுவதும் கரோனா தினசரி பாதிப்பு இரண்டாவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,62,664 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில். நாடு முழுவதும் இரண்டாவது நாளாக கரோனா தினசரி தொற்று பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 92,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,90,89,069 ஆக உள்ளது. 

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,31,415 -ஆக குறைந்துவிட்டது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,62,664 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,75,04,126 -ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 2219 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 3,53,528 -ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசியளவில் குணமடைவோா் சதவீதம் 94.29 சதவீதமாக உயா்ந்துள்ளது. 

இதுவரை 37.1 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 23.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.