/

தில்லியில் புதிதாக 305 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 305 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2021, 11:33 am

DIN


தில்லியில் புதிதாக 305 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. 75,133 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 305 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 560 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,30,433 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,01,473 பேர் குணமடைந்துள்ளனர். 24,748 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 4,212 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.