ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய அணி என இரண்டு நிர்வாகங்களிடமிருந்தும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் பந்துவீசாதது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிடம் போட்டி நிறைவடைந்த பிறகு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஹானே, இந்தக் கேள்வியை நீங்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதன் பின், கேமரூன் கிரீன் காயம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது.
இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய அணி என இரண்டு நிர்வாகங்களிடமிருந்தும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் பந்துவீச்சிலும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆஸ்திரேலிய அணியிலும் உள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை நியாயமற்றது எனக் கூற முடியாது. ஆல்ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் அவரது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Andrew McDonald has stated that there are high expectations for all-rounder Cameron Green from both the IPL and the Australian team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த கேமரூன் கிரீன்!

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: கேமரூன் கிரீன்

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




