ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா 2வது அலையில் இளம் நோயாளிகளின் மரண விகிதம் அதிகரிப்பு

இளம் நோயாளிகளையும் கரோனா இரண்டாவது அலை விட்டுவைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

News image

இளம் நோயாளிகளையும் விட்டுவைக்காத கரோனா 2வது அலை

Updated On :11 ஜூன் 2021, 5:43 am

DIN


கொச்சி: கரோனா முதல் அலையின்போது, இணை நோய் இருப்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று அபாயத்தை ஏற்படுத்திய நிலையில், இளம் நோயாளிகளையும் கரோனா இரண்டாவது அலை விட்டுவைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா இரண்டாவது அலையின்போது, தொற்று பாதித்த இளம் வயது நபர்களும் மரணத்தைத் தழுவியது முன்களப் பணியாளர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளத்தில், கடந்த மே மாதத்தில் மட்டும் 30 வயதுக்குட்பட்ட 40 இளைஞர், இளைஞிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்னுயிரை இழந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலரும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். 

அதுமட்டுமல்ல, கேரள மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3,500 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அந்த மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கையில் 40 சதவீதமாகும். மே மாத மத்தியில் பலி எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டியபோது, அதில் 31 - 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக இருந்தனர்.

இளம் வயதினராக இருந்தாலும் தாமதமான பரிசோதனை, சிகிச்சையை சரியாக மேற்கொள்ளாதது போன்றவையே மரணத்தைத் தழுவக் காரணங்களாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.