மூத்த காங்கிரஸ் தலைவரும், உத்தரகண்ட் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ்(80) ஞாயிற்றுக்கிழமை தில்லியில் காலமானார். அவரது மறைவுக்கு பாஜக உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரை பக்க செய்தியில், ‘‘ டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ், பல சமூக சேவை முயற்சிகளில் முன்னணியில் இருந்தவர். திறமையான சட்டப்பேரவை உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர், சிறந்த நிர்வாக அனுபவம் பெற்றவர். அவரது மறைவு செய்தி அறிந்து ஆழந்த துயரமடைந்தேன். இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறப்பட்டுள்ளது.