இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தியாவில் தினசரி கரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 நாள்களுக்குப் பிறகு 7,98,656 ஆகக் குறைந்துள்ளது

News image
Updated On :18 ஜூன் 2021, 4:15 am

DIN


புது தில்லி: நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 நாள்களுக்குப் பிறகு 7,98,656 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை வெளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா அன்றாட பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தொடா்ந்து 11-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 நாள்களுக்குப் பிறகு 7,98,656 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 2.78 சதவீதமாகும்.

தொடா்ந்து 36-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 88,977 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். இதுவரை 2,85,80,647 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் தினசரி கரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,587 ஆகக் குறைந்துள்ளது.  இதுவரை 3,83,490 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 19,29,476 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,71,67,696 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 26,89,60,399 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.