கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கிராமங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது: மத்திய அரசு

கிராமப்புறங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜூன் 2021, 12:05 pm

DIN


கிராமப்புறங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மத்திய அரசின் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில் கிராமப்புறங்களில் அதிகளவில் செலுத்தப்பட்டு வருவதாகவும், கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலும் சாத்தியமானது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் இதுபற்றி தெரிவித்தது. 

"நேற்று செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசியில் 63.7 சதவிகிதம் கிராமங்களில் மட்டும் செலுத்தப்பட்டுள்ளன. 36 சதவிகிதம் நகர்ப்புறங்களில் செலுத்தப்பட்டன. 

அதேசமயம், நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் 46 சதவிகிதத்தினர் பெண்கள். 53 சதவிகிதத்தினர் ஆண்கள். இந்த சமமின்மையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர்களை முன்வர வைக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களில் பாதிக்கும் மேலான தடுப்பூசிகள் கிராமப்புறப் பகுதிகளில் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி செலுத்த முடியும் என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. கிராமப்புறப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலும் சாத்தியம் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக உள்ளது."  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.