மாநிலங்களின் கையிருப்பில் 1.89 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1.89 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1.89 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
நாடு முழுவதும் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்பட்டு 3 நாள்களில் 2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் கையிருப்பு நிலவரம் பற்றி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"நேரடியாகக் கொள்முதல் செய்தது உள்பட மொத்தம் 30,33,27,440 தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 28,43,40,936 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன (காலை 8 மணிக்கு வரையிலான தரவுகளின் அடிப்படையில்).
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1,89,86,504 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அடுத்த 3 நாள்களில் 21,05,010 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...