பிகாரில் நடிகை அனுபமாவின் புகைப்படத்துடன் ஆசிரியர் தகுதி சான்றிதழ் வெளியீடு

பிகார் பள்ளி தேர்வு வாரியம் வெளியிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் பிரபல நடிகை அனுபமாவின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிகாரில் நடிகை அனுபமாவின் புகைப்படத்துடன் ஆசிரியர் தகுதி சான்றிதழ் வெளியீடு
பிகாரில் நடிகை அனுபமாவின் புகைப்படத்துடன் ஆசிரியர் தகுதி சான்றிதழ் வெளியீடு

பிகார் பள்ளி தேர்வு வாரியம் வெளியிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் பிரபல நடிகை அனுபமாவின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 37 ஆயிரம் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிகாரில் நடைபெற்றது.

மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் முறை மூலம் மறு தேர்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிகாரில் கடந்த மார்ச் 12ஆம் தேதி 12 பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.

மேலும் எஞ்சிய 3 பாடத்திட்டங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஜூன் 21ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வுகள் முடிவுகள் மீது தற்போது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

பிகாரின் ஜெகநாபாத் பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் குமார் என்பவர் பிகார் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் பிகார் பள்ளி தேர்வு வாரியம் வெளியிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் அவர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

எனினும் அவரது சான்றிதழில் அவரது புகைப்படத்திற்கு மாற்றாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை அனுபமாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ரிஷிகேஷ் குமார் புகாரளித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிகார் பள்ளி தேர்வு வாரியம் கணினியை கையாள்பவரின் கவனக்குறைவினால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com