தில்லியில் புதிதாக 85 பேருக்கு மட்டுமே கரோனா
தில்லியில் புதிதாக 85 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவே குறைந்தபட்ச தினசரி பாதிப்பு.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் புதிதாக 85 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவே குறைந்தபட்ச தினசரி பாதிப்பு.
தில்லி கரோனா நோய்த் தொற்று தரவுகள் சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 72,920 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 85 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.12 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,33,675 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 158 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,07,116 பேர் குணமடைந்துள்ளனர். 24,961 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,598 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...